பேச்சு:இமயமலை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
படிமம் சரியாக இணைக்க வில்லை. --C.R.Selvakumar 16:24, 26 மே 2006 (UTC)
Plate என்பதற்கு நில ஓடு = நிலவோடு என்பது பொருத்தமான சொல். பின்னர் விரிவாக எழுதிகிறேன். இங்கு இவ்வோடுகள் நகருவதால் மிக மிகப்பொருத்தமாக இருபொருள் திறம்பட ஏற்று நிற்கும். ஓடு என்றால் வலுவான ஓரளவு தடிப்புள்ள பொருள் (மண்டை ஓடு, மண்ணால் செய்து சுட்ட கூரை ஓடு முதலியன). நம் மண்டையோடு போலவே, நம் நில உலகும் இளகிய உட்பொருளை மூடி உள்ள நிலவோடுகள் (Plates in Plate tectonics) நகர்வதாலும் செம்பொருள் பெற்றிருக்கும் என்பது என் எண்ணம். Plate tectonics என்பதற்கு நான் நிலவோட்டு நகர்ச்சி என்று கூறுவேன். இந்திய துணைக்கண்டத்தின் நகர்ச்சியைக் காட்டும் படத்தை சீராக ஏற்றுவித்ததற்கு நன்றி. --C.R.Selvakumar 17:22, 26 மே 2006 (UTC)