சிபிலிசு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிபிலிசு பரவலாகக் காணப்படும் ஒரு பாலியல் நோயாகும். இது திரெப்போனிமா பல்லிடம் (Treponema pallidum) என்னும் பக்ரீயாயாவால் ஏற்படுகிறது. நோயுள்ளவருடன் பாலுறவு கொள்வதால் கடத்தப்படுகிறது. சில வேளைகளில் தொற்றடைந்த குருதியினாலும் தொற்றடைந்த தாயிடமிருந்து கருவிலுள்ள குழந்தைக்கும் தொற்றலாம்.
[தொகு] அறிகுறிகள்
- பாலுறுப்புப் பிரதேசத்தில் நோவற்ற புண்கள்
- உடலெங்கும் குறிப்பாக உள்ளங்கைகளிலும் உள்ளங்கால்களிலும் சொறி ஏற்படல்
- நிணநீர்ச் சுரப்பிகள் வீங்கிப் பருத்தல்
- தசைவலி
[தொகு] கண்டறிதலும் சிகிச்சையும்
- VDRL என்னும் குருதிச் சோதனை மூலம் நோயைச் சரியாக இனங்காணலாம்.
- TPPA என்னும் குறிப்பான சோதனையால் உறுதிப்படுத்தலாம்
- ஊசிமூலம் பென்சிலின் செலுத்தி சிகிச்சையளிக்கப்படும்