ஜோர்ஜ் ஈஸ்ற்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜோர்ஜ் ஈஸ்ற்மன் (ஜார்ஜ் ஈஸ்ட்மன்) (George Eastman, ஜூலை 12, 1854 - மார்ச் 14, 1932) ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) கோடாக் கம்பனியின் (Eastman Kodak Co) நிறுவனரும் ஒளிப் படச்சுருளைக் கண்டுபிடித்தவரும் ஆவார். ஒளிப்படச்சுருளின் கண்டுபிடிப்பே புகைப்படக்கலையை சாதாரண மக்களும் பயன்படுத்த வழிவகை செய்தது. அதுவே அசையும் படங்களின் கண்டுபிடிப்புக்கும் அடிப்படையாக அமைந்தது.
ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) அவர்கள் 1854 இல் ஐக்கிய அமெரிக்காவில் உள்ள நியூயார்க் மாநிலத்தில் உள்ள யூட்டிக்கா என்னும் ஊரில் பிறந்தார். ஈஸ்ற்மன் (ஈஸ்ட்மன்) தனது பதினான்காவது வயதில் வேலை செய்ய ஆரம்பித்தார். 1888 இல் "கோடாக்" என்பதை வியாபாரக் குறியீடாக காப்புரிமை செய்து கொண்டார். கடைசியில் 1932 இல் தன்னியக்கக் கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். "என் வேலை முடிந்தது. காத்திருப்பானேன்?" (My work is done. Why wait?) என்பதே அவர் தற்கொலைக்கு முன் எழுதி வைத்ததாகும்.
[தொகு] வள்ளன்மை
தம் வாழ்நாளில் ஏறத்தாழ 100 மில்லியன் அமரிக்க டாலர்களை நற்பணிகளுக்காகக் கொடையாக அளித்துள்ளார். இக் கொடையை பெரும்பாலும் ரோச்சஸ்ட்டர் பல்கலைக்கழகத்திற்கும், மாசாசுச்செட்ஸ் இன்ஸ்ட்டியூட் ஆஃவ் டெக்னாலஜி என்னும் பல்கலைக்கழக்த்திற்கும் அளித்தார்.