பகுப்பு பேச்சு:நபர்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பொருளடக்கம் |
[தொகு] நபர்கள்/மனிதர்கள் பகுப்புக்கு முதற் பக்கத்திலிருந்து இணைப்பு
நபர்கள்/மனிதர்கள் என்ற பகுப்பைத் தாய்ப்பகுப்பாக்கி முதற் பக்கத்தில் இருந்து இணைப்புத் தரலாமே! Wikipedia பேச்சு:பக்க வகைகளின் கட்டமைப்பு/தொகுப்பு01 இல் ரவி, நற்கீரன் ஆகியோர் இதனை முன்மொழிந்திருப்பதாகத் தெரிகிறது. ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும் இப்பொழுது மனிதர்கள் தொடர்பான கட்டுரைகள் நிறைய உருவாகியுள்ளன. ஆதலால் அப்பகுப்பை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்துவது பொருத்தமாயிருக்கும். --கோபி 15:47, 12 ஜூலை 2006 (UTC)
- தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது--ரவி 11:32, 13 ஜூலை 2006 (UTC)
-
- நன்றி ரவி. ஆட்கள் தொடர்பான கட்டுரைகள் அனைத்தும் இப்பகுப்புள் வர வேண்டும் என்ற நோக்கில் பெருமளவில் சிறு மாற்றங்களைச் செய்துள்ளேன். விக்கிப்பீடியர்கள் அவற்றை சரிபார்த்தல் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் பகுப்புக்கள் ந்ன்கு ஆராய்ந்து உருவாக்கப்படுவதே நல்லது --கோபி 18:31, 13 ஜூலை 2006 (UTC)
[தொகு] நபர்கள்/ மனிதர்கள் எதிர் வாழ்க்கை வரலாறு
மேலும் நபர்கள்/ மனிதர்கள் என்ற தலைப்புக்கள் குறித்த பகுப்புக்குப் பொருத்தமற்றவையே. ஏனெனில் எல்லோரும் மனிதர்களே! மேலும் நபர்கள் என்பது குறிப்பிடத்தக்க மனிதர்கள் என்று பொருளுணர்த்துவதாகப் படவில்லை. ஆளுமைகள் என்ற சொல்லும் மிகப் பொருத்தமானதாகத் தெரியவில்லை. சற்று நீளமாக இருதாலும்கூட "வாழ்க்கை வரலாறு" என்றே பெயரிடலாம் எனப் படுகிறது. கோபி 15:47, 12 ஜூலை 2006 (UTC)
- இப்பகுப்பில் உள்ள அனைத்து கட்டுரைகளும் வாழ்க்கை வரலாறுகள் என சொல்ல இயலாது. (எ.கா- ராதிகா). வருங்காலத்தில் அனைத்துக் கட்டுரைகளும் அந்த நோக்கில் விரிவாக்கப்படும் என்றோ உருவாக்கப்படும் என்றோ சொல்ல இயலாது. இவற்றில் உள்ள கட்டுரைகள் பெரும்பாலும் அந்த நபர் தொடர்புடைய முக்கிய விடயங்கள், அவருடைய பணி, பங்களிப்புகள் குறித்து தெரிவிக்கின்றனவே தவிர முழு வாழ்க்கையையும் ஆவணப்படுத்தவில்லை. ஆங்கில விக்கியிலும் இப்பகுப்பை en:category:People என்றே அழைக்கிறார்களே தவிர en:category:biographies என்று அழைப்பதில்லை. பொதுவாக கூறின், சில நபர்களை குறித்த சில தகவல்களை இக்கட்டுரைகளில் காணலாம் என்பதால், நபர்கள் என்ற தலைப்பே பொருத்தமாகப் படுகிறது. Persons / People என்ற சொல்லுக்கு நபர்கள் பொருந்துகிறது என்று தான் தோன்றுகிறது. மனிதர்கள்= Men/women/people, ஆளுமைகள் = Personalities என்பதையும் கவனிக்க. People என்ற ஆங்கிலச் சொல்லில் உள்ள தொனி, மனிதர்கள் என்ற சொல்லில் இருப்பதாக எனக்குப் படவில்லை--ரவி 11:32, 13 ஜூலை 2006 (UTC)
[தொகு] ஆட்கள் அல்லது ஆளுமைகள் என்பதே பொருத்தமானது
நபர் என்பது அரபுச்சொல். ஓர் ஆளைக்குறிக்க இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. மனிதர் எனும்போது அது விஞ்ஞான ரீதியான சொல்லாக இருக்கிறது. ஆள் என்பதையே பயன்படுத்தலாமே? ஆளுமை என்ற சொல்லின் அடிச்சொல்லும் இந்த ஆள் என்ற சொல் தானே? ஆட்கள் என்று பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் ஆளுமைகள் நல்ல சொல் --மு.மயூரன் 13:17, 13 ஜூலை 2006 (UTC)
- நபர் தமிழ்ச் சொல் இல்லை என்பது எனக்கு புது செய்தி. ஆட்கள் என்ற சொல் தற்கால வழக்கில் அவ்வளவு மரியாதைக்குரிய சொல்லாக இல்லை. அது தான் கொஞ்சம் உறுத்துகிறது??--ரவி 10:19, 14 ஜூலை 2006 (UTC)
பிரபல்யமானவர்கள் அல்லது அதற்கு ஒத்த சொற்கள்??--Kanags 10:58, 14 ஜூலை 2006 (UTC)
- மாந்தர் என்னும் சொல்லை ஆளலாம். மாந்தன் என்றால் மனிதன். செம்மாந்தர் = சிறந்த மக்கள், சிறப்பெய்திய மக்கள்.--C.R.Selvakumar 12:22, 14 ஜூலை 2006 (UTC) கனகு, ப்ரபல்யமானவர் என்றால் புகழ் பெற்றவர். புகழாளர். பரவலாக அறியப்பட்டவர் பிரபல்யமானவர். பிரபல்யம் வடமொழி.--C.R.Selvakumar 12:25, 14 ஜூலை 2006 (UTC)செல்வா
[தொகு] படங்களை வரிசைப்படுத்தல்
கனக்ஸ், படங்களை வரிசையில் இட்டால் மேலதிக படங்களை சேர்க்கலாம் என்று இருந்தேன். அப்படி மாற்றியமைத்தால் உங்களுக்கு ஆட்சோபனை எதுவும் இருக்குமா? ஏன் என்றால் பகுப்புகள் கீழே சென்று விட்டன...--Natkeeran 02:08, 30 டிசம்பர் 2006 (UTC)
- நற்கீரன், எனக்கு எதுவும் ஆட்சேபனை இல்லை. மேலும் படங்கள் சேர்ப்பதாயின் வரிசையில் இடுவது நல்லது.--Kanags 04:51, 30 டிசம்பர் 2006 (UTC)