பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாகிஸ்தான் துடுப்பாட்ட அணி பாகிஸ்தான் சார்பாகத் துடுப்பாட்ட போட்டிகளில் பங்கு கொள்ளும் அணியாகும். இது பாகிஸ்தான் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்வகிக்கப்படுகிறது.
ஜூலை 28, 1952 ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் தகைமை வழங்கப்பட்டது. இவ்வணி தனது டெஸ்ட் போட்டியை இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிராக அக்டோபர் 1952 இல் டில்லியில் விளையாடியது. இத்தொடரில் ஐந்து போட்டிகளில் விளையாடியது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.