அல் அக்சா மசூதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல் அக்ஸா மசூதி (Al-Aqsa Mosque; அரபு: المسجد الاقصى, மஸ்ஜித் அல்-அக்ஸா) ஜெரூசலத்திலுள்ள, மாஜெத் குன்று அல்லது அல்-ஹாரம் ஆஷ்-ஷெரிப் (Noble Sanctuary) எனப்படும், சமயக் கட்டிடத் தொகுதியின் ஒரு பகுதியாகும்.
முஸ்லிம்களின் மரபுப்படி முகமது நபி அவர்கள் மலை 621 இலிருந்து சுவர்க்கம் சென்றதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, இந்த மசூதி முஸ்லிம்களின் மூன்றாவது புனிதமான மசூதியாகக் கருதப்படுகிறது. Dome of the Rock இற்குப் பின்னர் (690 CE), 710 CE இல், உமயாட்டுகளால் மரத்தாலான முதலாவது அல் அக்ஸா மசூதி கட்டப்பட்டது. இது குறைந்தது 5 தடவையாவது மீளக்கட்டப்பட்டுள்ளது. பூமியதிர்ச்சியால், ஒரு தடவையாவது, முற்றாக அழிந்துள்ளது. கடைசியாக, பெரிய மீளமைப்பு 1035 ஆம் ஆண்டு நடைபெற்றது.
அல் அக்ஸா மசூதியே ஜெரூசலத்திலுள்ள மிகப்பெரிய மசூதியாகும். 5000 பேர்வரை உள்ளேயும், வெளியிலுமிருந்து தொழக்கூடிய வசதிகள் உண்டு. இக்கட்டிடத்தில், Crusader களுடைய பாணியுட்பட பல பாணிகளின் கலவை காணப்படுகிறது. Crusaders ஜெரூசலத்தைக் கைப்பற்றி வைத்திருந்தபோது, இந்த மசூதியை ஒரு அரண்மனையாகப் பயன்படுத்தினார்கள். முற்காலத்தில் கோயில் இருந்த இடத்தில் இந்த மசூதி கட்டப்பட்டது என்ற நம்பிக்கையில், அப்பொழுது இது சொலமனின் கோயில் என அழைக்கப்பட்டது. அவ்வப்போது, அல்-அக்ஸா, யூதத் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு இலக்காக இருந்தது எனினும், பெரும்பாலான தாக்குதல்கள், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளால் முறியடிக்கப் பட்டன.
இம் மசூதியின் சுற்றுமதிலின் ஒருபகுதியான மேற்குச் சுவர் யூதர்களின் வணக்கத்துக்குரியதாக இருப்பதால், ஜெரூசலத்தின் ஒரு சிறிய பகுதியான இது முஸ்லிம்கள், யூதர்களுக்கிடையேயான முறுகல் நிலைக்குக் காரணமாகக் கூடியது.
[தொகு] வெளி இணைப்புகள்
- Noble Sanctuary: அல்-அக்ஸா மசூதி
- 1969 தகராறு பற்றிய அறிக்கை த டைம்ஸ் இலிருந்து.