ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நான்காண்டுகளுக்கு ஒரு முறை ஆசிய நாடுகளின் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்குபெறும் பிரம்மாண்டமான விளையாட்டுப் போட்டிகளாகும். இப்போட்டிகள் 'ஆசியாட்' (Asiad) என்றும் அழைக்கப்படுகின்றன. சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பின் மேற்பார்வையில் ஆசிய ஒலிம்பிக் குழுவினரால் இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 1952 ஆம் ஆண்டு இந்தியாவின் தலை நகரம் புது தில்லியில் நடைபெற்றன. 15 ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கத்தார் நாட்டின் தோகா நகரில் டிசம்பர் 1 முதல் டிசம்பர் 15 வரை நடைபெறுகின்றன.