ஆர்தர் கொனன் டொயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சேர் ஆர்தர் கொனன் டொயில் (Sir Arthur Conan Doyle, மே 22, 1859 – ஜூலை 7, 1930) உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான செர்லக் ஹோம்சை உருவாக்கிய ஸ்கொட் எழுத்தாளர். துப்பறியும் புனைகதைத் துறையின் பெரும் மாற்றத்துக்குப் பங்களித்தவர். விஞ்ஞானப் புனைகதைகள், வரலாற்று நாவல்கள், நாடகங்கள், கவிதை, அ-புனைவு எனப் பெருமளவு எழுதியவர்.