எனிட் பிளைட்டன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எனின் பிளைட்டன் (Enid Blyton) (ஆகஸ்ட் 11, 1897 - 1968; ஐக்கிய இராச்சியம்) சிறுவர்கட்காக கதைகள், கவிதைகள், நாடகம் போன்ற பல ஆக்கங்களை படைத்த ஓர் பிரபலமான எழுத்தாளர்.
பொருளடக்கம் |
[தொகு] இளமைக் காலம்
எனின் பிளைட்டன் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகளாக ஆகஸ்ட் 11, 1897 ல் பிறந்தார். லண்டனில் பிறந்த இவர் பாக்கிங்காம் எனும் லண்டன் புறநகர் பகுதியில் வளர்ந்தார். இவரிற்கு 13 வயது இருக்கும் போது இவரது தந்தை இவர்களின் குடும்பத்தை விட்டுப்பிரிந்தார். பின்னர் பாடசாலை விடுதியில் தங்கிப் படித்தார். பாடசாலைக் கல்வியின் பின்பு முன் பள்ளி ஆசிரியராகப் பயிற்சி பெற்றார். இதன் பின்பு ஒரு வருடம் ஆசிரியராகவும் நான்கு வருடம் குளந்தைகள் பராமரிப்பவராகவும் பணிபுரிந்தார்.
[தொகு] திருமணத்தின் பின்பு
1924 ல் ஹக் பொலக் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். முறையே 1931, 1935 ல் இரண்டு குளந்தைகளிற்குத் தாயானார். 1942 ல் பொலக்கை விவாகரத்து செய்த எனிட் பிளைட்டன் 1943 ல் கெனத் டரல் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். 1968 ல் இவர் இறையடி சேர்ந்தார்.
[தொகு] ஆக்கங்கள்
இவரின் படைப்புகடளில் முதலில் பிரசுரமான படைப்பு, எனிட் பிளைட்டனுக்கு 14 வயது இருக்கும் போது ஒரு சிறுவர் சஞ்சிகையில் பிரசுரமானது. பின்னா 1917 ல் என்னொரு கவிதை சஞ்சிகை (Nash's Magazine) ஒன்றில் பிரசுரமானது. 1921 அளவில் இவரின் கவிதைகளும் கதைகளும் அதிகமாக பிரசுரமாகத் தொடங்கியது. இவரின் முதலாவது கவிதைப் புத்தகமான சயில்ட் விஸ்பர்ஸ் (Child Whispers) 1922 ல் பிரசுரமானது. 1922 அளவில் தன்னை முழுமையாக கதைகள் புனைவதில் ஈடுபடுத்திக்கொண்டார். அன்றிலிருந்து 1964 வரை சுமார் 600 சிறுவர் புத்தகங்களை எழுதியதுடன் பல்வேறுபட்ட சஞ்சிகைகளில் பல ஆக்கங்களைப் படைத்தார். Famous Five, Secret Seven, Little Noddy series போன்ற புத்தகங்கள் இவரிற்கு பெயர் பெற்றுக் கொடுத்தன. இவரின் எழுத்துக்கள் பெருமளவில் இளம் வாசகர்களைப் பெற்றுக் கொடுத்ததுடன் இவரின் புத்தகங்கள் 20 ம் நூற்றாண்டில் பல தடவை மறுபிரசுரமானது.
[தொகு] எழுத்து நடை
எனிட் பிளைட்டனின் கதைகள் பொதுவாக மர்மக் கதைகளாகவோ அல்லது வீரதீரக் கதைகளாகவோ காணப்பட்டது. இவர் பயன்படுத்திய சொற் களஞ்சியத்தின் காரணமாக ஆரம்ப படிநிலை ஆங்கில மாணவர்கள்கூட இக்கதைகளை வாசிக்கக்கூடியதாக இருந்தது. கதைகளில் நல்ல மற்றும் கூடாத பாத்திரங்கள் தெளிவாக வேறுபடுத்திக் காட்டப்படுவதுடன் நன்னெறிகளைக் கற்பிப்பனவாகவும் உள்ளது.