கதவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கதவு என்பது, கட்டிடமொன்றினுள் அல்லது கட்டிடத்தின் ஒரு பகுதியான அறையொன்றினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு அமைப்பு ஆகும். இது பொதுவாகக் கட்டிடத்தின் இரண்டு பகுதிகளுக்கு இடையேயுள்ள சுவரில் அல்லது கட்டிடத்தின் வெளிப்புறச் சுவரில் அமைக்கப்படும் துவாரம் ஒன்றை மூடி அமைக்கப்பட்டிருக்கும். கதவுகள் கட்டிடங்களில் மட்டுமன்றி, ஊர்திகள், அலுமாரிகள், கூண்டுகள் போன்றவற்றிலும் காணப்படும்.
[தொகு] கதவுகளின் நோக்கம்
கதவுகள் பலவகையான நோக்கங்களை நிறைவேற்றுகின்றன. இவற்றுட் சில செயற்பாடு சார்ந்தவை. வேறுசில அழகியல் மற்றும் வேறு அம்சங்கள் சார்பானவை.
- கதவுகள் அவை பொருத்தப்பட்டுள்ள துவாரத்தின் ஊடாக மனிதர் மற்றும் விலங்குகள் போய்வருவதற்கு உதவுகின்றன.
- திறந்திருக்கும்போது கட்டிடத்தினுள் காற்றோட்டத்துக்கு உதவுகின்றன.
- குறிப்பிட்ட அறைகளுள் காற்று, நீர், வெப்பம், வேண்டாத ஒலி முதலியன போகாமல் அடைக்க உதவுகின்றன.
- அறைகளை வெப்பப்படுத்தவோ, வளிப் பதனம் செய்யவோ ஏற்றவகையில் அறைகளைக் காற்றுக் கசியாமல் அடைக்க உதவுகின்றன.
- வேண்டாதவர்கள் நுழைவதைத் தடுக்கின்றன.
- எதிரிகள், திருடர்களிடமிருந்து பாதுகாப்பு.
- தீ பரவலைத் தடுத்தல்.
- கதவுகள், சிறப்பாக வாயில் கதவுகள் அழகூட்டும் அம்சமாக வடிவமைக்கப்படுகின்றன.
- சில பண்பாடுகளில் கதவுகள் குறியீட்டுச் செயற்பாடுகளையும் கொண்டிருப்பதுண்டு.