காசுப்பாய்ச்சல் கூற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காசுப்பாய்ச்சல் கூற்று (cash flow statement )என்பது ஒர் நிறுவனத்தில் குறித்த காலப்பகுதி ஒன்றில் (காலாண்டிற்கு அல்லது ஒருவருடத்திற்கு) நிகழும் காசும் காசுக்குச் சமமானவைகளினதும் உட்பாய்ச்சல் மற்றும் வெளிப்பாய்ச்சல்களினது நிதி அறிக்கை ஆகும்.இக் காசுப்பாய்ச்சல் கூற்றிலிருந்து நிறுவனமொன்றின் நிதிவளங்கள்,கடன் தீர் இயலளவு போன்ற தகவல்களை அறிந்து கொள்ளமுடியும்.
கணக்கியலில் காசு எனும் பதமானது பணத்தினைதவிர குறுங்காலத்தில் இழப்பின்றி காசாக மாற்றக்கூடிய முன்னுரிமை பங்குகள்(Preference shere),தொகுதிகடன்(Debenture),திறைசேரி உண்டியல்(Treasury Bill),அழைப்பு வைப்பு(Call deposit) என்பனவற்றையும் குறிக்கும்.
நிறுவனமொன்றில் இடம்பெறும் காசுப்பாய்ச்சல்கள் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளின்படி (இலங்கை கணக்கீட்டு நியமம் 09) 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:
- செயற்பாட்டு நடவடிக்கை (Operating activities).
- முதலீட்டு நடவடிக்கை (Investing activities).
- நிதியிடல் நடவடிக்கை (Financing activities).
பொதுக்கம்பனிகள் நிதியறிக்கை வெளியிடும் போது காசுப்பாய்ச்சல் கூற்றினையும் வெளியிடவேண்டும் என இலங்கையில் கம்பனிச்சட்டம் கூறுகின்றது.
பொருளடக்கம் |
[தொகு] காசுப்பாய்ச்சல் கூற்றின் பொதுவான வடிவம்
12/31/2005 இருந்து 12/31/2006 வரை காசுப்பாய்ச்சல் கூற்று செயற்பாட்டு நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல் +/- x x முதலீட்டு நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல் +/- y y நிதியிடல் நடவடிக்கையால் தேறிய காசுப்பாய்ச்சல் +/- z z மொத்த காசுப்பாய்ச்சல்கள் = காசுப்பாய்ச்சல்களின் மாற்றம் + ஆரம்ப காசின் மொத்தம் + ஆரம்ப காசு = இறுதி காசின் கூட்டுத்தொகை = இறுதிக்காசு
[தொகு] செயற்பாட்டு நடவடிக்கை
செயற்பாட்டு நடவடிக்கைகள் நிறுவனதில் இடம்பெறும் வியாபார நடவடிக்கைகளினையும் இதன்போது ஏற்படும் காசுப்பாய்ச்சல்களை உள்ளடக்கும்.எடுத்துக்காட்டாக, விற்பனை,பொருட்கொள்வனவு போன்றவையாகும்.
இவைதவிர:
- சொத்துக்கள் மீதான தேய்மானம்.
- வட்டி கொடுப்பனவு.
- செலுத்தப்பட்ட வரி.
- முதலீட்டு இலாபம்.
- அட்டுறு (கணக்கீடு) கொடுப்பனவுகள்.என்பனவும் உள்ளடக்கப்படும்.
[தொகு] முதலீட்டு நடவடிக்கை
மூதலீட்டு நடவடிக்கைகள் நிறுவனத்தில் இடம்பெறும் நீண்டகாலச் சொத்துக்களின் கொள்வனவினையும் அதன் விற்பனையின்போதும் நிகழும் காசுப்பாய்ச்சலினை உள்ளடக்கும்.
[தொகு] நிதியிடல் நடவடிக்கை
நிதியிடல் நடவடிக்கைகள் நிறுவனத்தில் முதலீட்டாளர்,பங்குதாரர்,வங்கிளிடமிருந்து நிதி பெறப்படுதல்,மீள செலுத்தப்படுதல் போன்றவற்றால் ஏற்படும் காசுப்பாய்வினையும் உள்ளடக்கும்.
- பங்கு வழங்கள்,மீட்டல்.
- தனிச்சங்கள் வழங்கள்,மீட்டல்.
- குத்தகை,வாடகை போன்றனவும் இடம்பெறும்.
[தொகு] தயாரிப்பு முறைகள்
[தொகு] நேர் முறை
Transaction | In (Debit) | Out (Credit) |
---|---|---|
Incoming Loan | +$50.00 | |
Sales (which were paid for in cash) | +$30.00 | |
Materials | -$10.00 | |
Labor | -$10.00 | |
Purchased Capital | -$10.00 | |
Loan Repayment | -$5.00 | |
Taxes | -$5.00 |
Total.......................................... | .......+$40.00....... |
---|
The cash flow for this example is +$40.00.
[தொகு] நேரில் முறை
Period Ending | 31-Dec-03 |
---|---|
Operating Activities, Cash Flows Provided By or Used In | |
Net Income | 17,853 |
Adjustments To Net Income | 13,260 |
Depreciation | 2,121 |
Changes in Account Receivables | 14,188 |
Changes In Liabilities | 31,571 |
Changes In Inventories | - |
Changes In Other Operating Activities | (93,847) |
Total Cash Flow From Operating Activities | (14,854) |
Investing Activities, Cash Flows Provided By or Used In | |
Capital Expenditures | (2,354) |
Provided By or Used In | |
Dividends Paid | 5,773 |
Treasury stock acquired Paid | (2,416) |
Issuance of long-term debt | 67,054 |
Payments and redemptions of long-term debt | (45,800) |
Change in deposits | 42,136 |
Contractholder fund deposits | 8,346 |
Contractholder fund withdrawals | (5,976) |
Cash flows from financing activities of continuing operations | 64,405 |
Effect of exchange rate changes on cash and cash equivalents | 579 |
Change in cash and due from banks | $3,823 |
[தொகு] இவற்றையும் பார்க்க
[தொகு] வெளி இணைப்புக்கள்
- Cash Flow Statement Explanation with Examples.(ஆங்கிலத்தில்)