கிளாரினெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கிளாரினெட் (clarinet) துளைக்கருவி (aero phones) வகையைச் சேர்ந்த ஓர் இசைக்கருவியாகும். இது ஒரு மேற்கத்திய இசைக்கருவியெனினும் கருநாடக இசைக்கும் தற்போது பயன்படுத்தப்படுகின்றது.
[தொகு] அமைப்பு
இது ஏறக்குறைய நாதசுவரத்தின் வடிவத்தை ஒத்தது. Reed என்று சொல்லப்படும் பகுதி கருவியின் முனையில் வாய் வைத்து ஊதுவதற்கு ஏற்ர வகையில் பொருத்தப்பட்டிருக்கும். குழல் வெள்ளியினாலோ மரத்தினாலோ செய்யப்பட்டிருக்கும். இதன் மேல் பல துளைகள் போடப்பட்டிருக்கும். அவற்றைத் தேவைக்கேற்ப மூடித் திறப்பதற்கு சாவிகள் துளைகளின் அருகிலேயே இணைக்கப்பட்டிருக்கும்.
[தொகு] கருநாடக அறிமுகம்
19ம் நூற்றாண்டில் மகாதேவ நட்டுவனார் இக்கருவியை பரத நாட்டிய அரங்குகளில் சின்னமேளம் என்று சொல்லப்படும் இசைக்கருவிகளோடு முதன் முதலாக பயன்படுத்தினார். ஏ. கே. சி. நடராஜன் ஒரு சிறந்த கிளாரினெட் இசைக் கலைஞர்.