சித்திரகுப்தர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சித்திரகுப்தர் (சமஸ்கிருதம்: चित्रगुप्त, rich in secrets) இந்து சமயத்தில் உள்ள கடவுளாவார். பூலோகத்தில் மனிதர்கள் செய்யும் பாவ, தர்மங்களினைப் பற்றிய முழு விபரங்களினையும் பதிவு செய்துவைப்பது இவர் தொழிலாகும். மனிதர்கள் செய்யும் பாவங்கள் மற்றும் நல்ல செயல்களிற்கேற்றாற்போல பாவம் செய்யும் மானிடர்களை நரகத்திற்கும், நல்ல செயல்களைப் பின்பற்றுபவர்களினை சொர்க்கத்திற்கும் அனுப்பவல்ல சக்தியினை உடையவர் சித்ரகுப்தர். கயஷ்தா இனத்தவரால் போற்றப்படுகின்ற கடவுளாகவும் சித்திரகுப்த மகாராஜா விளங்குகின்றார்.
பொருளடக்கம் |
[தொகு] புராணக் கூற்றுக்கள்
மரணக் கடவுளான இயமன் தான் கொல்ல நினைப்பவர்களின் விபரங்களினைப் பற்றிய தெளிவான கருத்துக்களெதுவும் இல்லாத காரணத்தினால் பிரம்மாவிடம் தனது கஷ்டகாலத்தினை விளக்குகின்றார், அச்சமயம் அங்கு தோன்றும் சிவன் சித்திரகுப்த மகாராஜாவினை இப்பணிக்கு அமர்த்துகின்றார். சித்திரகுப்தனாரும் மானிடர்கள் பிறந்து இறக்கும் தருணம் வரை அவர்களது வாழ்க்கையில் அவர்கள் செய்த அனைத்துக் காரியங்களினையும் எழுதிவைக்கின்றார். இவ்வாறு இவர் எழுதும் குறிப்புகளினை ஆகாஷிக் குறிப்புகள் என அழைப்பர்.
[தொகு] சித்திரகுப்தரின் பிறப்பு
சித்திரகுப்தரின் பிறப்பு பற்றி பலவகையிலும் கூற்றுக்கள் உண்டு; அவற்றுள் ஒரு கூற்றின்படி பிரம்மா மனிதர்களுள் பிராமணர், சத்திரியர், வைசியர் மற்றும் சூத்திரன் என நான்கு பிரிவுகளினை ஏற்படுத்துகின்றார். பின்னர் யமன் தனக்குள்ள பணிச்சுமைகளினைப் பற்றி பிரம்மாவிடம் முறையிட மையினை உடைய கிண்ணத்தினை ஒரு கையிலும் சிறகால் ஆன எழுதுகோலினை மறு கையிலும் ஏந்தியவாறு தோன்றுகின்றார் சித்திரகுப்தனார். இவர் தோன்றியதன் பின்னரே கயஷ்தா என்ற ஜந்தாவது ஜாதியும் தோற்றம் பெற்றது.
இன்னொரு கூற்றின்படி பார்வதி வரைந்த ஓவியத்தின் மீது சிவன் ஊதிய காரணத்தினால் இவர் தோற்றம் பெற்றிருப்பதாகவும் ஒரு கூற்று.
[தொகு] சித்திரகுப்தருக்கான கோயில்கள்
தென்னிந்தியாவில் இவருக்காகப் பல கோயில்கள் உண்டு குறிப்பாக காஞ்சிபுரத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.