சுவாமி ஞானப்பிரகாசர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பன்மொழிப் புலவர் சுவாமி ஞானப்பிரகாசர் (ஆகஸ்ட் 30, 1875 - ஜனவரி 22, 1947) தமிழின் தொன்மையை உலகிற்கு எடுத்தியம்பியவர். வளம் மிக்க ஒரு சந்ததியை உருவாக்கும் விதத்தில் அறிவுபூர்வமான நூல்களை எழுதிய அத்தமிழ் பெரியார் அன்னை தமிழுக்கு செய்த தொண்டு அளப்பரியதாகும்.
பொருளடக்கம் |
[தொகு] பிறப்பு
இவர் யாழ்ப்பாணத்தை ஆட்சி புரிந்த மன்னர்களுள் ஒருவரான 6 ஆவது பரராஜசேகரனின் பரம்பரையைச் சேர்ந்தவரான இராசலிங்கம் சாமிநாதப் பிள்ளை, தங்கமுத்து தம்பதியினரின் மகனாக 30.08.1875 அன்று பிறந்தார். இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.
[தொகு] இளமைக் காலம்
5 வயதாக இருந்த போது தந்தை காலமானார். இளம் விதவையான தங்கமுத்து அம்மையார் உறவினர்களின் விருப்பத்துடன் கத்தோலிக்கரான தம்பிமுத்துப்பிள்ளையை மறுமணம் புரிந்தார். சிறுவன் வைத்தியலிங்கம் பிற்காலத்தில் மொழியியறிவில் ஞானியாக, தமிழ் சமூகத்திற்கு பிரகாசமாக இருப்பார் என்ற சிந்தனையில் என்னவோ அவருக்கு ஞானப்பிரகாசர் என்ற பெயர் சூட்டப்பட்டது. அன்னையும் மைந்தனும் ஞானஸ்நான திருவருட்சாதனத்தைப் பெற்று கத்தோலிக்க மதத்தைத் தழுவினர்.
[தொகு] கல்வி
அச்சுவேலியில் அமைந்திருந்த அமெரிக்க மிஷன் ஆங்கில பாடசாலையொன்றில் ஆரம்ப கல்வியைக் கற்ற அவர், யாழ் புனித பத்தரிசியார் கல்லூரியில் கல்வி பயின்றார்.
[தொகு] திருநிலைப்படுத்தப்படுதல்
1893 இல் புகையிரதப் பகுதியில் இலிகிதர் பரீட்சையில் முதலாவதாக தேறி கடிகமுகவயிலும் பின்னர் கொழும்பிலும் 3 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் 1895 ஆம் ஆண்டு இறைபணிக்கென தம்மை அர்ப்பணித்து யாழ். குரு மடத்தில் சேர்ந்துகொண்டார். 01.12.1901 அன்று குருவானவராக திருநிலைப்படுத்தப்பட்டார்.
[தொகு] பன்மொழிப் பாண்டித்தியம்
யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் கற்ற தமிழும் ஆங்கிலமும், எழுதுவினைஞராக கடமையாற்றிய போது கற்ற சிங்களமும், யாழ். குருமடத்தில் கற்ற இலத்தீன், பிரான்சியமும் அவரை பல மொழிகளையும் கற்றிடத்தூண்டியது. மொழிகளுக்கிடையே ஒருவகை தொடர்பு இருப்பதை கண்டுணர்ந்த அவர், 72 மொழிகள் வரை பாண்டித்தியம் பெற்றார்.
[தொகு] நூல்கள் இயற்றல்
இறையர்ப்பணிப்பு சேவையில் முதல் பங்காக ஊர்காவற்றுறையில் பணியாற்றினார். முதன் முறையாக அங்கு நூல் நிலையம் ஒன்றை உருவாக்கி மக்கள் மத்தியில் படிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். வேதநூல்களை இரவலாகக் கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்ளும் நடைமுறையை செயல்படுத்தினார். 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தாமே இயற்றி 30 இக்கும் மேற்பட்ட நூல்களை அச்சேற்றினார்.
'ஞான உணர்ச்சி' எனும் நூல் வீரமாமுனிவரால் எழுதப்பட்டதல்ல சாங்கோபாங்க சுவாமிகளே எழுதினார் என இடித்துரைத்தார். நல்லூரில் புனித சவேரியார் ஆலயத்தை கட்டியெழுப்பி பல ஆண்டுகள் பணியாற்றினார். அதனால் நல்லூர் சுவாமி ஞானப்பிரகாசர் என அழைக்கப்படலானார்.
[தொகு] யாழ்ப்பாண வைபவ விமரிசனம்
யாழ்ப்பாண வைபவமாலையில் தாம் கண்ட சரித்திர முரண்பாடுகளை யாழ்ப்பாண வைபவ விமரிசனம் என்னும் நூலில் எடுத்துக் காட்டினார்.