தளபதி (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தளபதி | |
இயக்குனர் | மணிரத்னம் |
---|---|
தயாரிப்பாளர் | ஜி.வெங்கடேஷ்வரன் |
கதை | மணிரத்னம் |
நடிப்பு | ரஜினிகாந்த் மம்முட்டி ஷோபனா அரவிந்த் சாமி Amrish Puri பானுப்பிரியா |
இசையமைப்பு | இளையராஜா |
ஒளிப்பதிவு | சந்தோஷ் சிவன் |
வினியோகம் | மெட்ராஸ் டாக்கீஸ் |
வெளியீடு | 1991 |
கால நீளம் | 137 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
IMDb profile |
தளபதி (1991) ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மணிரத்னம் இப்படத்தை இயக்கினார். ரஜனிகாந்த்,மம்முட்டி,அரவிந்த் சாமி,ஷோபனா மற்றும் பலர் நடித்துள்ளார்கள்.
பொருளடக்கம் |
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
சிறுவயதிலேயே அனாதையாக தாயாரால் விடப்படுகின்றார் சூர்யா (ரஜினிகாந்த்) இதனைத் தொடர்ந்து ஏழைகளுடன் வாழ்க்கை நடத்தும் சூர்யா நல்ல மனிதராக உருவெடுக்கின்றார்.நல்ல செயல்கள் பல செய்யும் சூர்யா ஒரு சமயம் பெண்ணொருவரைத் தாக்க முற்பட்டவனைத் தாக்கிய பொழுது அவன் இறந்துவிடுகின்றான்,இதனால் சூர்யா கைது செய்யப்படுகின்றார் ஆனால் அவரை விடுதலை செய்ய ஏற்பாடு செய்கின்றார் அவ்வட்டாரத் தலைமை அதிகாரத்தினை உடையவரான தேவ்ராஜ் (மம்முட்டி).தனது குழுவில் ஒருவனையே சூர்யா கொன்றுள்ளான் என்பதனைத் தெரிந்தும் அவன் செய்த் நல்ல குணத்தினால் காப்பாற்றுகின்றார்.பின்னர் இருவரும் நல்ல நண்பர்களாகின்றனர் அச்சமயம் அங்கு புதியதாக பதவியேற்கும் அர்ஜூன் (அரவிந்த் சாமி) தேவ்ராஜின் குற்றச் செயல்களிற்காக அவரைக் கைது செய்ய ஏற்பாடுசெய்ய உத்தரவு பிறப்பிக்கின்றார்.சூர்யா இதனை அறிந்து அர்ஜூனைக் கொல்லச் செல்கின்றார் ஆனால் அர்ஜூன் தன் சகோதரர் என அறிந்து செய்வதறியாது திகைத்து நிற்கின்றார்.மேலும் அவரின் தாயாரின் கட்டளைப்படி சகோதரனான அர்ஜூனனுக்கு கெடுதல் செய்யக் கூடாதென சத்தியம் செய்தவரென்பதால் அவ்வாறு நின்றது குறிப்பிடத்தக்கது.
[தொகு] பாடல்கள்
- யமுனை ஆற்றிலே
- ராக்கம்மா கையத்தட்டு - எஸ்.பி பாலசுப்பிரமணியம், ஸ்வர்னலதா
- சுந்தரி கண்ணால் - எஸ்.பி பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி
- காட்டுக்குயிலு - எஸ்.பி பாலசுப்பிரமணியம், யேசுதாஸ்
- புத்தம் புது பூ - யேசுதாஸ், எஸ். ஜானகி
- சின்னத் தாயவள் - எஸ். ஜானகி
- மார்கழிதான் - குழு
[தொகு] துணுக்குகள்
- இத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான அர்ஜூனன் (அர்ஜீன்) ,கர்ணா (சூர்யா),துரியோதனன் (தேவ்ராஜ்) போன்றவர்கள் மகாபாரதக் கதையில் பின்னப்பட்ட கதாபாத்திரங்கள் என்பதாக பலரும் கருதுவது குறிப்பிடத்தக்கது.
[தொகு] வெளி இணைப்புகள்
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்கள் | ||
பல்லவி அனுபல்லவி (1983) | உணரூ (1985) | பகல் நிலவு (1985) | இதய கோவில் (1985) | மௌன ராகம் (1986) | நாயகன் (1987) | அக்னி நட்சத்திரம் (1988) | கீதாஞ்சலி (1989) | அஞ்சலி (1990) | தளபதி (1991) | ரோஜா (1992) | திருடா திருடா (1993) | பம்பாய் (1995) | இருவர் (1997) | தில் சே (1998) | அலைபாயுதே (2000) | கன்னத்தில் முத்தமிட்டால் (2002) | ஆய்த எழுத்து (2004) | யுவா (2004) | குரு (2007) | லஜ்ஜோ (2007) |