தவளை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தவளை நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகள் வகையைச் சேர்ந்த முதுகெலும்புள்ள ஒரு விலங்கு ஆகும். அறிவியலில் "வாலில்லா" என்று பொருள்படும் கிரேக்க மொழிச் சொற்களில் இருந்து பெற்ற Anura (அன்யூரா, an = இல்லா, oura = வால்) என்னும் இனத்தைச் சேர்ந்ததாகும். முழுவளர்ச்சி அடந்த தவளைகளுக்கு நீண்ட பின்னங்கால்களும், திரண்டு உருண்ட உடலும், விரல்களுக்கு இடையே சதை இணைப்புள்ள கொய்யடி என்னும் பாதங்களும், புறத்தே பிதுங்கி இருக்கும் கண் முழிகளும், கொண்டு வாலில்லா ஓர் இருவாழ்வி விலங்கு. சிறு குட்டைகளிலும், குளங்களிலும் காணப்படுவன. தவளைகளில் ஏறத்தாழ 5000 வெவ்வேறு உள் இனங்கள் உள்ளன. தென் அமெரிக்காவைச் சேர்ந்த சில தவளைகள் மிகுந்த நஞ்சு உடையதாகவும் உள்ளன.
