திரினிடாட் டொபாகோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திரினிடாட் டொபாகோ குடியரசு அமெரிக்கா கண்ணடத்தில் இருக்கும் கரிபியன் பிரதேசத்தில் இருக்கும் இரு தீவுவுகளை முதன்மை நிலப்பகுதியாக கொண்ட நாட்டைக் குறிக்கும். தென் அமெரிக்கா நாடானா வெனீசூலாவின் வடகிழக்கில் இத்தீவுகள் உள்ளன. திரினிடாட் தீவே பெரியதும் பெரும்பான்மையான மக்கள் (96%) வசிக்கும் தீவும் ஆகும். இவ் இரு தீவுகளுடன் 21 சிறிய தீவுகளும் திரினிடாட் டொபாகோ குடியரசில் அடங்கும்.
இத்தீவுகளில் ஆரம்பத்தில் அமெரிக்க முதற்குடிமக்கள் வசித்து வந்தனர். ஐரோப்பிய காலனித்துவத்தின் பின்பு, இங்கு வேலை செய்வதற்காக கொண்டுவரப்பட்ட ஆபிரிக்க, சீன, போர்த்துகீச, இந்திய வம்சாவளியினரே பெரும்பான்மையானார்கள்.