திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இத்தலம் நாகை மாவட்டத்தில் அமைந்துள்ளது. நவக்கிரகத் தளங்களில் இது புதனுக்கு உரிய தளமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளையானை வழிபட்ட தலமென்பது தொன்நம்பிக்கை.