தில் சே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தில் சே | |
![]() |
|
---|---|
இயக்குனர் | மணிரத்னம் |
தயாரிப்பாளர் | மணிரத்னம் ராம் கோபால் வர்மா சேகர் கபூர் |
கதை | மணிரத்னம் (கதை) மணிரத்னம் (திரைக்கதை) |
நடிப்பு | ஷா ருக் கான் மனீசா கொய்ராளா பிரீத்தி சிந்தா ரகிவீர் ஜாதவ் சபயசச்சி சக்கரவர்த்தி பியுஸ் மிஷ்ரா கிருஷ்ணகாந்த் ஆதித்ய சிறீவஸ்தாவா கென் பிலிப் சஞ்சேய் மிஷ்ரா மிட்டா வஷிஸ்த் அருந்ததி ரௌவோ மலைக்க அரோரா கௌதம் போரா மஞ்சித் பவா ஷஅட் அலி |
இசையமைப்பு | ஏ.ஆர்.ரஹ்மான் |
வினியோகம் | மெற்றாஸ் டாக்கீஸ் |
வெளியீடு | ஆகஸ்டு 21, 1998 |
கால நீளம் | 163 நிமிடங்கள் |
மொழி | ஹிந்தி |
IMDb profile |
தில் சே (உயிரே) திரைப்படம் 1998 இல் வெளியிடப்பட்ட ஹிந்தித் திரைப்படமாகும்.மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தகுந்தது.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
அமர்காந்த் வர்மா (ஷா ருக் கான்) பத்திகையாளராவார்.அனைத்திந்திய வானொலியில் பணிபுரியும் இவர் மேக்னாவை (மனீசா கொய்ராளா) ஒரு புகையிரத சாலையில் சந்திக்கின்றார்.அவரிடம் காதல் வசப்படும் வர்மா பின் தொடர்ந்து சென்று காதலிப்பதையும் கூறுகின்றார்.இதனைப் பொருட்படுத்தாது இருக்கும் மேக்னா தனக்கு மணம் ஆகிவிட்டதென பொய் கூறுகின்றார்.ஒரு தீவிரவாதப் பெண்ணாகவும் காஷ்மீர் பகுதியிலிருந்து இந்தியப் படைகளினால் தங்கள் குடும்பத்திற்கு ஏற்படும் அவல நிலைகளினால் தீவிரவாதியாக மாற்றப் படுகிறாள் எனவும் தெரிந்து கொள்ளும் வர்மா அவளிடம் நோக்கிச் செல்கின்றார்.இறுதியில் அவரைப் பார்க்கும் வர்மா அவள் தற்கொலைதாரியாக உடலில் வெடி மருந்துகளைச் சுமந்து செல்வதை உணராமல் அவள் அருகில் செல்கின்றார்.எதிர்பாராத விதமாக வெடித்த அவள் உடலில் சுமந்து சென்ற வெடிப்பொருளினால் இருவரும் இறக்கின்றனர்.
[தொகு] விருதுகள்
1999 பெர்லின் உலகத்திரைப்பட விழா (ஜேர்மன்)
- வென்ற விருது-நெட்பாக் விருது-மணிரத்னம்
1999 தேசியத் திரைப்பட விருது (இந்தியா)
- வென்ற விருது -சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒளிப்பதிவு -சந்தோஷ் சிவன்
- வென்ற விருது -சில்வர் லோட்டஸ் விருது - சிறந்த ஒலிப்பதிவு - H.சிறீதர்
1999 பில்ம்பேர் விருதுகள் (இந்தியா)
- வென்ற விருது - சிறந்த புதுமுக நட்சத்திரம் - பிரீத்தி சிந்தா
- வென்ற விருது - சிறந்த பாடலாசிரியர் - குல்சார்
- வென்ற விருது - சிறந்த ஆண் பாடகர் - சுக்விந்தர் சிங் சையா சையா பாடலிற்காக
- வென்ற விருது - சிறந்த இசையமைப்பாளர் - ஏ.ஆர்.ரஹ்மான்
- வென்ற விருது - சிறந்த சிகை அலங்காரம் - பாராஹ் கான்
- வென்ற விருது - சிறந்த ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
மணிரத்னம் இயக்கிய திரைப்படங்கள் | ||
பல்லவி அனுபல்லவி (1983) | உணரூ (1985) | பகல் நிலவு (1985) | இதய கோவில் (1985) | மௌன ராகம் (1986) | நாயகன் (1987) | அக்னி நட்சத்திரம் (1988) | கீதாஞ்சலி (1989) | அஞ்சலி (1990) | தளபதி (1991) | ரோஜா (1992) | திருடா திருடா (1993) | பம்பாய் (1995) | இருவர் (1997) | தில் சே (1998) | அலைபாயுதே (2000) | கன்னத்தில் முத்தமிட்டால் (2002) | ஆய்த எழுத்து (2004) | யுவா (2004) | குரு (2007) | லஜ்ஜோ (2007) |