நீல பென்னி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நீல பென்னி எனப்படும் மொரீஷியஸ் தபால் அலுவலகத் தபால்தலைகள் உலகின் கிடைத்தற்கு அரியனவும், பெறுமதி மிக்கனவுமான தபால்தலைகளுள் அடங்குவன. இதே வடிவமைப்பிலான சிவப்பு நிறத் தபால்தலையும் உண்டு இது சிவப்புப் பென்னி என அழைக்கப்படுகின்றது.
இரண்டு காரணங்களால் இதற்குப் பெறுமதி ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியத்திக்கு வெளியே வெளியிடப்பட்ட பிரித்தானியப் பேரரசின் முதல் தபால்தலைகள் இவை என்பது ஒரு காரணம், இவற்றின் தொடக்க வெளியீடுகளில் உள்ள தவறான சொற் பயன்பாடு இன்னொரு காரணம்.