நெறிமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நெறிமம் அல்லது திசையன் என்பது இயற்பியலில் அளவுப் பருமனும் திசையும் கொண்ட ஒரு கருத்துப் பொருள். எடுத்துகாட்டாக, விரைவு என்பது நொடிக்கு எவ்வளவு தொலவு ஒரு பொருள் நகருகின்றது என்பதைக் குறிக்கும் விரைவின் பரும அளவாகும். எத்திசையில் அப்பொருள் விரைகின்றது என்னும் கருத்தும் சேர்ந்து எண்ணிக் குறிக்கப்பட்டால் அது விரைவின் நெறிமம் அல்லது திசையன் ஆகும். அதாவது விரைவு என்னும் நெறிமம் என்பது இரு பண்புகள் கொண்டதாகக் கருதப்படும் (1) அளவுப் பருமம், (2) திசை.
இரு நெறிமங்களைக் கூட்டும் பொழுது அவைகளின் திசைகளையும் முறைப்படிக் கணக்கில் எடுத்துக்கொள்வது மிக இன்றியமையாதது. (விரிக்க வேண்டும்)