புள்ளிருக்கு வேளூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புள்ளிருக்கு வேளூர் என்னும் வைத்தீஸ்வரன் கோயில் என்ற ஊரிலுள்ள வைத்தியநா சுவாமி திருக்கோயில் சம்பந்தர், அப்பர் இருவரின் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது நாகப்பட்டிணம் மாவட்டத்தில் மயிலாடுதுறை நகரின் அருகில் அமைந்துள்ளது. சூரபத்மனின் மார்பை பிளக்க முருகன் வேல் வாங்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).