அப்துல் கபூர் இறையருட் கவிமணி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இறையருட் கவிமணி, பேராசிரியர், டாக்டர் அப்துல் கபூர் எம்.ஏ.,டி.லிட். எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர், மார்க்க அறிஞர், பத்திரிகையாளர், பன்மொழி வல்லுனர். அவர் கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் 1924ல் பிறந்து 2002ல் மறைந்தவர்.
இறையருட் கவிமணி, தமிழ்ச் செம்மல், தீன்வழிச் செம்மல், நபிவழிச் செல்வர் , கன்சுல் உலூம் (அறிவுக் களங்சியம்) ஆகிய கெளரவங்களைப் பெற்ற பேராசிரியர் கா. அப்துல் கபூர் எம். ஏ.,டி.லிட் அவர்களைத் தமிழ் கூறும் நல்லுலகம் நன்கு அறியும். ஒரு தமிழ்ப் பேராசிரியரால் கல்லூரி முதல்வராகவும் பன்மொழிப்புலவராகவும், பன்னூல் ஆசிரியராகவும் கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும், தமிழ் மொழிக்கும் சமுதாயத்துக்கும் அரை நூற்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றியவர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழகம் அவருக்குத் 'தமிழ்ச் செம்மல்' விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. அவரது தமிழ்ப்புலமைக்குச் சான்றாக அமையும் அவரது 'அரும் பூ ' என்னும் குழந்தைப்பாடல் நூலினை ஆய்வு செய்தோர், பல்கலைக் கழகங்களில் ஆயுவுப் பட்டம் பெற்றுள்ளனர். 'இனிக்கும் இறைமொழிகள்' என்னும் பெயரில் பேராசிரியர் அவர்கள் , திருக்குர்ஆன் வசனங்கள் சிலவற்றிற்கு விளக்கவுரை எழுதி வெளியிட்டுள்ள ஆய்வுகள் அறிஞர்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
இவையன்றி, கற்கண்டு சொற்கொண்டு உரையாற்றி உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடல் கடந்த நாடுகளிலும் முத்திரை பதித்த மூத்த தமிழரிஞர். இறையருள் பொழியும் கவிதைக் கொண்டல். அரும்பு உள்ளங்களுக்கும் கவிமழை தந்த கரும்புக் கவிஞர் இவர். பைந்தமிழ் நாட்டில் பாட்டரங்குகள் தோன்றக் காரணமான முன்னோடி. வாடாத மாலை இலக்கியங்கள் பலவற்றை வண்ணத் தமிழில் இயற்றிச் சிறந்த காலத்தின் கண்ணாடி. உரைநடைத் தமிழில் உயிரூட்டப் பாணியை ஆக்கி 'அழகு தமிழுக்கோர் அப்துல் கபூர் ' எனப் பல்கழைக் கழகத் தமிழ்த் துறை தlலைமைப் பேராசிரியராலேயே பாரட்டப் பட்டவர்.
தொடரும்...