அமெரிக்க வேதியியல் குமுகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அமெரிக்க வேதியியல் குமுகம் American Chemical Society என்பது அமெரிக்க வேதியியல் அறிஞர்களின் குழுமம். இக் குமுகம் 1876ல் அமெரிக்கவில் உள்ள நியூ யார்க் பல்கலைகழகத்தில் தொடங்கபெற்றது. தற்பொழுது (2006ல்) 158,000 வேதியியல் ஆய்வாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இவ்வேதியியல் குமுகம் ஆண்டுதோறும் பல ஆய்வரங்குகள் நடத்துகின்றது, மற்றும் 20க்கும் மேற்பட்ட பயன்மிகு முதல்தரமான ஆய்விதழ்களை வெளியிடுகின்றது. இதனால் வெளியிடப்பட்ட முதல் ஆய்விதழின் தொடக்கம் 1879.
இக் குமுகம் வேதியியல் பொருள்களின் அறிவியல் குறிப்புகளைத் தொகுத்துத் தரும் பணி (Chemical Abstracts Service (CAS)) ஒன்றை நடத்தி வருகின்றது. ஒவ்வொரு வேதியியல் பொருளுக்கும் தனியொரு அடையாள எண் தருகின்றது. இதற்கு CAS எண் என்று பெயர். இந்த எண்ணைக் கொண்டு ஒரு பொருளைப்பற்றிய துல்லியமான உண்மைகளை அறிந்து கொள்ளலாம். 2006 ஆம் ஆண்டு 'சூன் மாதம் வரையிலும் சுமார் 28,250,300 வேதியியல் பொருள்களுக்கான பண்புகள் குறிக்கப்பட்டு உள்ளன. ஒரு கிழமைக்கு (ஒரு வாரத்திற்கு) 50,000 புதிய வேதியியல் பொருள்களுக்கான செய்திகள் சேர்க்கப்படுகின்றன.
[தொகு] வெளி இணைப்புகள்
ஒரு வேதியியல் பொருளின் CAS எண் என்ன என்று கண்டுபிடிக்க கீழ்க் காணும் இலவச இணைப்புகளை பயன் படுத்தலாம்.