அறவிடமுடியாக்கடன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கணக்கீட்டில் அல்லது நிதியியலில் அறவிடமுடியாக்கடன் (Bad debt) என்பது வணிகமொன்றில் கடன் பெற்றவர்களிடமிருந்து நீண்டகாலமாக அறவிடமுடியாமல் போன கடன்களின் ஒரு பகுதியைக் குறிக்கும். கணக்கீட்டுப் பதிவின்போது தொடர்புடைய கடனாளியின் பேரேட்டுக்கணக்கு பதிவு அழிக்கப்படுவதுடன் அவ்வாண்டின் வணிகத்தில் ஏற்பட்ட நட்டமாக அறவிடமுடியாக்கடன் காட்டப்படும்.