பேச்சு:இசம்ஸ் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இதனைவிடப் பொருத்தமான தலைப்பு இடப்பட வேண்டும். மார்க்சிசம் என்று எழுதுவதைத் தவிர்த்து மார்க்சியம் என எழுதுகிறோம். இயம், இயல் போன்ற பின்னொட்டுக்கள் இசம் என்பதற்கு பயன்படுகின்றன. இசம்ஸ் என்பது ஆங்கிலத்திலிருந்து ஒலிபெயர்க்கப்பட்டதாகும். இசங்கள் என்பது ஓரளவு ஏற்கக் கூடியது. அதனை விடப் பொர்த்தமான சொற்கள் இருப்பின் இன்னமும் நல்லது. --கோபி 18:56, 21 செப்டெம்பர் 2006 (UTC)
கோபி, இயம், இயல் பயன்படுத்தப்படுகின்றது என்பது புலப்படுகின்றது. இந்தப் பட்டியலின் முதன்மை நோக்கம் ஆங்கில இசங்களுக்கான இணையான தமிழ் சொற்களை பட்டியலுவதுதான். எனினும் உங்களின் இசங்கள் பரிந்துரை த.வி க்கு பொருந்தும் என்று நினைக்கின்றேன். --Natkeeran 22:08, 21 செப்டெம்பர் 2006 (UTC)
மேலும் அலசியதில் ism என்பது இயம் என்றுதான் பெரும்பாலும் தமிழிலில் மருவும் வழக்கம் இருக்கின்றது. நன்றி. பின்னர் மாற்றிவிடுகின்றேன். --Natkeeran 18:47, 1 நவம்பர் 2006 (UTC)
- நன்றி. கோபி 18:49, 1 நவம்பர் 2006 (UTC)