இணைய இணைப்பைப் பகிர்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இணைய இணைப்பைப் பகிர்தலானது விண்டோஸ் மற்றும் லினக்ஸ் இயங்குதளங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படுவதாகும். இது மைக்ரோசாப்ட் இயங்குதளங்களில் விண்டோஸ் 98 இரண்டாவது பதிப்பிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது உள்ளூர் வலையமைப்பூடாக கணினிகளுக்கிடையில் இணைய இணைப்பானது பகிரப்படுவதாகும். இவ்வாறு இணைய இணைப்பை பகிரும் கணினியானது ஏனைய கணினிகளுக்கு IP முகவரிகளை வழங்குவதோடு, வலையமைப்பில் உள்ள ஏனைய கணினிகள் இணையத்தை அணுகும் போது உள்ளூர் IP முகவரிகளை இணைய இணைப்பை பகிரும் கணினியில் IP முகவரிகளாக மாற்றி இணைய இணைப்பில் உதவுகின்றன. இது நிறுவுதற்கு எளிதாக இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்துவதைக் கண்காணிப்பதோ மட்டுப்படுத்துவதோ IP முகவரிகள் வழங்குவதை விரும்பியவாறு மாற்றுவதோ இயலாது.
[தொகு] விண்டோஸ் 2000/XP/2003 பதிப்புகளில் செய்முறை
- Start -> All Programs ->Connect to -> Show All Connections
- இணைய இணைப்பானது பகிரவிருக்கும் இணைப்பை Right Click செய்யவும்
- Properties ஐத் தேர்ந்தெடுக்கவும்
- Internet Connection Sharing in கீழ் Allow other network users to connect through this computers internet connection என்பதைத் தேர்வு செய்யவும்
- இப்போது, வலையமைப்பில் ஏனைய கணினிகள் யாவும் தானாகவே IP முகவரிகள் மற்றும் DNS வழங்கியைப் பெறுமாறிருந்தால் ஓர் இணைய இணைப்பில் இருந்து எல்லாக் கணிகளும் இணையத்தை அணுக முடியும்