இதயக்கமலக் கோலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இதயக்கமலக் கோலம் என்பது, புள்ளிகள் இட்டு வரையப்படும் ஒரு கோலம் ஆகும். புள்ளிகள் இட்டபின் ஓரிடத்தில் தொடங்கிக் கையை எடுக்காமலே இக் கோலத்தை வரைந்து முடிக்கலாம் என்பது இதன் சிறப்பு ஆகும். இதனால் இக் கோலத்துக்கு தெய்வீகத் தன்மை இருப்பதாகத் தமிழரில் ஒரு பகுதியினர் நம்புகிறார்கள். இக் கோலத்தை இறைவனின் இதயமாகக் கருதும் அவர்கள் வீடுகளில் பூசை அறைகளில் இதனை வரைவது வழக்கம். இக் கோலத்தைக் கையெடுக்காமல் வரைந்தால், நினத்தது நிறைவேறும் எனக் கருதுபவர்களும் உள்ளனர்.
ஒரு புள்ளியிலிருந்து தொடங்கி ஆறு புள்ளிகள் கொண்ட வரிசைகள் எட்டுத் திசைகளிலும் இடப்படுகின்றன. இவ்வாறு இடப்படும் 41 புள்ளிகளைக் குறித்த முறையில் வளைகோடுகளால் இணைப்பதன் மூலம் இக் கோலம் பெறப்படுகின்றது.