இந்தியத் திரைப்படங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்தியாவின் மிக முக்கியமான ஊடகங்களில் திரைப்படங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. இந்தி, தமிழ்,தெலுங்கு,வங்காள மொழி,மலையாளம் ஆகிய மொழிப் படங்கள் புகழ்பெற்றவை.மேலும் இந்தியத்திரைப்படத்துறை உலகிலேயே அதிகளவில் திரைப்படங்கள் வெளியிடும் திரைத்துறைகளில் முதல் இடத்தில் உள்ளது 2003ல் மட்டும் 877 திரைப்படங்களும் 1177 விவரணைப்படங்களும் இந்தியாவில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.மேலும் 2005 ஆம் ஆண்டின் கணிப்பின்படி இந்தியாவில் திரைப்பட அனுமதிச்சீட்டுக்களின் கட்டணம் மிகவும் குறைந்ததாகக் காணப்படுகின்றது அதாவது ஒரு அனுமதிச் சீட்டின் விலை 0.20 அமெரிக்க டாலர்களும்.அமெரிக்காவில் அனுமதிச்சீட்டின் விலை 6.41 டாலர்களாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது.இந்தியாவின் திரைப்பட அனுமதிகள் வீதம் ஆசிய பசிபிக் கண்டங்களில் 73% ஆகும்.2005 ஆம் ஆண்டிற்கான மொத்த வருவாய் 2.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.மேலும் இந்தியாவில் அமைந்திருக்கும் ராமோஜி திரைப்பட நகரமே உலகின் மிகப் பெரிய திரைப்பட நகரம்.மத்திய திரைப்பட வாரியத்தின் கணிப்பின்படி இந்தியாவில் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் சுமார் ஒரு பில்லியன் இந்தியக் குடிமக்கள் திரைக்கு செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தியத் திரைப்படங்கள் இந்தியாவில் மட்டும் அல்லாது மேற்கத்திய நாடுகளிலும் ரசிகர்கள் பலரைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.