Wikipedia:இன்றைய சிறப்புப் படம்/நவம்பர் 15, 2006
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
புரூக்ளின் பாலம் (Brooklyn Bridge) ஐக்கிய அமெரிக்காவில், நியூ யார்க் மாநிலத்தில் உள்ள பழைமையான தொங்குபாலங்களில் ஒன்றாகும். 5,989 அடி (1825 மீ) நீளமுள்ள இப்பாலம் கிழக்கு ஆற்றின் மீது மேன்ஹேட்டனில் இருந்து புரூக்ளின் வரை கட்டப்பட்டுள்ளது. இது கட்டிமுடிக்கப்பட்ட போது இதுவே உலகின் மிகப்பெரிய தொங்குபாலம் ஆகும். இப்பாலத்தின் கட்டுமானப்பணிகள் ஜனவரி 3, 1870-ல் தொடங்கியது. பதின்மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மே 24, 1883-ல் இது கட்டிமுடிக்கப்பட்டது. முதல் நாள், மொத்தம் 1,800 ஊர்திகளும் 150,300 மக்களும் இப்பாலத்தைக் கடந்தனர். படத் தொகுப்பு - மேலும் சிறப்புப் படங்கள்... |