இயேசுவின் உவமைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இயேசுவின் உவமைகள், இயேசு இஸ்ரவேல் நாட்டில் போதனை செய்யும் போது பயன்படுத்திய உவமைக் கதைகளாகும். இயேசு கூறிய பல உவமைகள் விவிலியத்தின் நான்கு நற்செய்தி நூல்களில் எழுதப்பட்டுள்ளது. இயேசு பெரும்பாலும் உவமைகள் மூலமே போதனகளை மேற்கொண்டார். இயேசு இவ்வாறு போதனை செய்த காலம் சுமார் மூன்று ஆண்டுகளாகும். எனவே ஆய்வாளர்கள், விவிலியத்தில் குறிப்பிடப்படாத மேலும் பல உவமைகளை இயேசு கூறியிருக்கலாம் என கருதுகின்றனர். இயேசுவின் உவமைகள் சிறிய கதையைப் போல காணப்பட்டாலும் சில உவமைகள் ஒரு வசனத்துடனேயே முடிவடைந்து விடுகின்றன.
விவிலியத்தின் நற்செய்தி எழுத்தாளர்களான மத்தேயு 17 உவமைகளையும், மாற்கு ஐந்து உவமைகளையும், லூக்கா 19 உவமைகளையும், யோவான் இரண்டு உவமைகளையும் குறிப்பிட்டுள்ளனர். சில உவமைகளை ஒன்றுக்கு மேற்பட்ட நற்செய்தியாளரும் குறிப்பிட்டுள்ளனர். விவிலியதில் மொத்தம் 42 இயேசுவின் உவமைகள் உள்ளன. கெட்ட குமாரன் மற்றும் நல்ல சமாரியன் என்ற இரு உவமைகள் லூக்கா நற்செய்தியில் மட்டுமே காணப்படுகின்றன. யோவான் நற்செய்தியில் உள்ள இரண்டு உவமைகளும் மற்றைய நற்செய்திகளில் காணப்படவில்லை.
பொருளடக்கம் |
[தொகு] உவமைப் பொருள்களும் எடுத்துக்காட்டுகளும்
இயேசுவின் உவமைகளை பொதுவாக மூன்று தலைப்புகளின் கீழ் அடக்கலாம். அவையாவன:
- விண்ணரசின் வருகை.
- கடவுள்.
- நீதி மற்றும் மனிதநேயம்.
என்பனவாகும். சில உவமைகளை இத்தலைப்புகளில் ஒன்றுக்கு கீழ் வகைப்படுத்தலாம். அதேவேளை மற்றும் சில உவமைகள் ஒன்றுக்கு மேற்பட்ட தலைப்புகளுக்கு பொருத்தமானவையாகும்.
[தொகு] விண்ணரசின் வருகை
- வீடுகட்டிய இருவரின் உவமை (மத்தேயு 7:24-27)
- விதைப்பவன் உவமை (மத்தேயு 13:3-23 மாற்கு 4:1-20 லூக்கா 8:5-15)
[தொகு] கடவுள்
- தாலந்துகள் உவமை (மத்தேயு 25:14-30)
- பத்து கன்னியர் உவமை (மத்தேயு 25:1-13)
[தொகு] நீதி மற்றும் மனிதநேயம்
- மூட செல்வந்தன் (லூக்கா 12:16-21)
- செல்வந்தனும் இலாசரசும் (லூக்கா 16:19-31)
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- இயேசுவின் உவமைகள். (ஆங்கிலத்தில்)
- இயேசுவின் உவமைகள் பட்டியல். (ஆங்கிலத்தில்)
- இயேசுவின் உவமைகள் பட்டியல். (ஆங்கிலத்தில்)
- ஏன் உவமைகள் பயன்படுத்தப்பட்டன?. (ஆங்கிலத்தில்)
- தமிழ் கிறிஸ்தவ சபை இயேசுவின் உவமைகள். (தமிழில்)