இருசமபக்க சரிவகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இருசமபக்கச் சரிவகம் என்பது நாற்பக்க சரிவகத்தில் இணையாகா பக்கங்கள் இரண்டும் சமமாகவும் ஒரே கோணத்தில் இணையான பக்கங்களோடும் சேரும் ஒரு முற்றுப்பெறும் வரிவடிவம். பரவலாக அறியப்படும் செவ்வகமும் (நீள்சதுரம்), சதுரமும் குறிப்பிட்ட சிறப்பான இருசமபக்கச் சரிவகம் ஆகும் ஆனால் சரியும் பக்கங்கள் இணையான பக்கங்களுக்குச் செங்குத்தான கோணத்தில் அமைந்துள்ளன.
படத்தில் காட்டப்பட்டுள்ள இருசமபக்க சரிவகத்தில் ABD, ACD என்னும் இரு முக்கோணங்களும் முற்றீடான (congruent) முக்கோணங்கள். BAD என்னும் கோணமும், CDA என்னும் கோணமும் இணையானது. எனவே இது இருசமபக்கச் சரிவகத்தில், இணையான இரு பக்கங்களிலும் சேரும் மற்ற இரு பக்கங்களும் இணையான கோணங்கள் கொண்டிருக்கும்.