இலக்கியத் தேறல் (நூல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலக்கியத் தேறல் சங்க இலக்கியங்கள் தொடங்கித் திரைப்படப்பாடல்கள் வரை அலசி வடித்த பன்னிரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். அகளங்கனால் (நா.தர்மராஜா) எழுதப்பட்ட இந்நூல் வவுனியா முத்தமிழ்க் கலாமன்றத்தினரால் 1988 இல் முதன்முதலில் பதிப்பிக்கப்பட்டது.