இலங்கை சனாதிபதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலங்கை சனாதிபதி இலங்கை அரசின் தலைவரும் முக்கிய அரசிய தலைவருமாவார். இப்பதவி 1978 இல் உருவாக்கப்பட்டது அது முதல் இப்பதவிக்கான அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது சனாதிபதி பதவி நிறைவேற்றதிகாரம் கொண்ட பத்வியாக கானப்படுவதோடு அதன் அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டு என்ற கருத்தும் வலுத்து வருகின்றது. தற்போதய இலங்க சனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆவார்.
இலங்கை |
![]() இது சார்பு கட்டுரைகளின் பாகமாகும்: |
|
|
பொருளடக்கம் |
[தொகு] இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி முறைமை
இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சனாதிபதியொருவர் காணப்படவில்லை. நிறைவேற்றதிகாரம் பிரதமரிடமும் titular அதிகாரம் ஆளுனரிடமும் காணப்பட்டது. 1972 அரசியலமைப்பு சட்டம் ஆளுனரை சனதிபதி பதவிக்கு மாற்றியது எனினும் சனாதிபதி பதவி அதிகாரங்கள் அற்ற பதவியாகவே காணப்பட்டது. 1978 அரசியலமைச் சட்டத்தில் வெஸ்மினிஸ்டர் முறை பிரெஞ்சு முறையால் மாற்றீடு செய்யப்பட்டது. தனி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும், பாராளுமன்றத்தைச் சாராத நீண்ட ஆட்சிக்காலத்தைக் கொண்ட, அத்காரம் கொண்ட சனாதிபதி முறை உருவாகப்பட்டது. சனாதிபதி முப்படைகளினதும் கட்டளைத்தளபதியாகவும் நியமிக்கப்பட்டார். பிரதமரை தெரிவு செய்யும் அதிகாரமும், பாராளுமன்றத்தை களைக்கும் அதிகாரமும் வழங்கப்பட்டது.
இலங்கையின் சனாதிபதி முறைமை பிரான்சின் சனாதிபதி முறைமையைவிட அதிகாரம் கூடியதாக காண்ப்படுகிறது. இலங்கையின் சனாதிபதி இலங்கை அரசின் எல்லா நடைமுறைகளிலும் ஈடுபடக்கூடியதாக உள்ளது. அமைச்சரவை அதிகாரங்களை சனாதிபதி செயளாலருக்கு வழங்குவதன் மூலம் கடந்துச் செல்ல முடியும்.
சனாதிபதிக்கு எதிராக வழக்குத் தொடரமுடியாது. ஆனால் பாராளுமன்றத்தின் மூன்றில்-இரண்டு பெரும்பான்மையினரின் அதிகாரத்தால் பதவி விழக்க முடியும். நாட்டில் அவசரகாலசட்டத்தை பிரப்பிக்க முடியும் இதன் பொது சனாதிபதிக்கு பாராளுமன்றத்தின் சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. 1994 சனாதிபதி தேர்தலின் போது சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதவியை நீக்குவதாக வாக்களித்தார், எனினும் இது நடைமுறை படுத்தவில்லை. இலங்கையில் சனாத்பதிமுறைமை நீக்கபட வேண்டும் என்ற கருத்து வலுத்து வருகின்றது.
[தொகு] சனாதிபதிகளின் பட்டியல்
இலங்கையின் சனாதிபதிகளின் பட்டியல்.
- வில்லியம் கொபல்லாவ (மே 22, 1972 - பெப்ரவரி 4, 1978)
- ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (பெப்ரவரி 4, 1978 - ஜனவரி 2, 1989)
- ரணசிங்க பிரேமதாசா (ஜனவரி 2, 1989 - மே 1, 1993)
- டிங்கிரி பண்டா விஜயதுங்கா (மே 2, 1993 - நவம்பர் 12, 1994)
- சந்திரிகா குமாரதுங்க (நவம்பர் 12, 1994 - நவம்பர் 19, 2005)
- மஹிந்த ராஜபக்ஷ (நவம்பர் 19, 2005 - இன்றுவரை)
[தொகு] கடைசி தேர்தல்
வார்ப்புரு:இலங்கைச் சனாதிபதி தேர்தல், 2005