இலத்திரனியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இலத்திரனியல்(மின்னணுவியல்)(Electronics) என்பது தேர்மியோனிக் வால்வுகள் (Thermionic valves) மற்றும் அரைக் கடத்திகள் போன்றவற்றில், இலத்திரன் அல்லது வேறு மின்னேற்றப்பட்ட துணிக்கைகளின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இயக்கப்படும் மின்சாரக் கருவிகள் பற்றிய கற்கை மற்றும் அவற்றின் பயன்பாடு ஆகும். அத்தகைய கருவிகள் பற்றிய தூய கற்கை இயற்பியலின் ஒரு பகுதியாகக் கருதப்படுகின்றது. அதே நேரம், செயல்முறைப் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில், இலத்திரனியற் சுற்றுக்களை வடிவமைப்பதும், அமைப்பதும், மின் பொறியியல் மற்றும் கணினிப் பொறியியல் போன்ற துறைகளுக்குள் அடங்குகிறது.
இலத்திரனியற் சுற்றுக்களின் (Electronic circuits) முக்கிய பயன்பாடு, தகவல்களைக் கட்டுப்படுத்துதல், process செய்தல், விநியோகம் செய்தல் என்பவற்றுடன், மின்காந்த சக்தியை மாற்றி விநியோகிப்பதுமாகும். இந்த இரண்டு பயன்பாடுகளும், மின்காந்தப் புலங்களையும், மின்னோட்டத்தையும் உருவாக்குவதையும், கண்டுபிடிப்பதையும் அங்கமாகக் கொண்டுள்ளன.
தந்தி, தொலைபேசி போன்றவற்றில் தகவல் பரிமாற்றத்துக்கு, சில காலமாகவே மின்சாரம் பயன்பட்டு வரினும், இலத்திரனியலின் வளர்ச்சி உண்மையில் வானொலியின் கண்டுபிடிப்புடனேயே ஆரம்பித்தது எனலாம். இன்று இலத்திரனியற் கருவிகள் மிகவும் பரந்துபட்ட வகையிலான வேலைகளைச் செய்கின்றன.
இலத்திரனியற் கருவியொன்றை நோக்கும் ஒரு வழி அதனைப் பின்வரும் பகுதிகளாகப் பிரிப்பதாகும்:
- உள்ளீடுகள் -
- சமிக்ஞை processing சுற்றுகள் -
- வெளியீடுகள்(Outputs) -