உமறுப் புலவர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உமறுப் புலவர் (17ம் நூற்றாண்டு) நபிகள் நாயகம் அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர்.
[தொகு] வாழ்க்கைக் குறிப்பு
உமறுப்புலவர் நெல்லை சிதம்பரனார் மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார்.
[தொகு] சீறாப்புராணம் இயற்றல்
வள்ளல் சீதக்காதி எனப் பெயர் பெற்ற செய்கு அப்துல் காதிர் மரைக்காயர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கிச் சீறாப்புராணம் பாடத்தொடங்கினார். சீதக்காதியின் மறைவுக்குப் பின் வள்ளல் அபுல்காசிம் மரைக்காயரால் ஆதரிக்கப்பட்டார்.
சீறாப்புராணம் தவிர முதுமொழிமாலை, சீதக்காதி நொண்டி நாடகம் ஆகிய நூல்களையும் இவர் எழுதியுள்ளார்.