உயிர்ச்சத்து C
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விட்டமின் Cயால் சளி தடுக்கப்படுவதாக மருத்துவ ஆராய்ச்சியில் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் சளி பிடிக்கும் ஆரம்பகட்டங்களில் அதிக அளவு விட்டமின் Cயை தினமும் உட்கொள்பவர்களுக்கு சளியின் தாக்கம் குறைவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. ஒரு நாளுக்குத் தேவையான அளவு சராசரியாக ஒரு டம்ளர் ஆரஞ்சு பழச்சாற்றில் கிடைக்கிறது. புகைப் பிடிப்பவர்கள் மேலும் ஒரு 35mg அளவு உட்கொள்ள வேண்டும்.
அபாய அளவு மீறினால் வயிற்றுப் பிடிப்பு, மூச்சடைப்பு, கழிச்சல் போன்றவை ஏற்படும். ஒரு நாளில் 200mg அளவைத் தாண்டினாலே குடலின் உறிஞ்சும் தன்மை குறையும், குடலில் வருகின்ற கழிவுப் பொருட்களில் நீர் உறிஞ்சப்படாவிட்டால் மலம் கழிச்சலாகப் போகும்.