உறையூர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உறையூர் முற்காலச் சோழர்களின் தலை நகரமாகும். இது காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்திருந்தது. இது இன்று திருச்சிராப்பள்ளியின் ஒரு பகுதியாக உள்ளது. இது தலைநகரமாக இருந்த காலத்தில் இதைச் சூழ வலிமையான மதிலும், அதைச் சுற்றிலும் அகன்ற அகழியும், அதையும் சூழ முள்மரக் காடுகளும் அமைத்துப் பாதுகாக்கப் பட்டதாகத் தெரிகிறது.
முற்காலச் சோழர்கள் வலிமையிழந்து சோழ நாடும் வீழ்ச்சியுற்ற பின்னரும், சோழச் சிற்றரசர்கள் உறையூரில் இருந்து ஆட்சி செலுத்தினர்.