உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முக்கீச்சுரம் - உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ளது. உதங்க முனிவருக்கு இறைவன் ஐந்து காலங்களில் ஐந்து வண்ணங்களோடு காட்சியளித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).