எரிபொருள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எரிபொருள் (Fuel) என்பது பெரும்பாலும் நெருப்புடனோ நெருப்பின்றியோ எரிப்பதன் மூலம் ஆற்றல் தரும் பொருட்களைக் குறிப்பதாகும். அணுப்பிளவு போன்ற மற்ற ஆற்றல் மூலங்களையும் எரிபொருள் என குறிப்பிடலாம்.
எரிபொருட்களைத் திண்மம், நீர்மம், வளிமம் என மூவகைப்படுத்தலாம்.
[தொகு] திண்ம எரிபொருள்
மரம், நிலக்கரி, பழுப்பு நிலக்கரி என்பன திண்ம எரிபொருள்.
[தொகு] நீர்ம எரிபொருள்
பெட்ரோல், மண்ணெண்ணெய், எரிசாராயம் போன்றவை நீர்ம எரிபொருள்.
[தொகு] வாயு எரிபொருள்
நீர்ம நிலைப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயு, இயற்கைவாயு, சாணவாயு, உற்பத்தி வாயு, நீர்வாயு போன்றன வாயு எரிபொருட்கள்.