ஓமந்தை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஓமந்தையானது இலங்கையில் வவுனியா மாவட்டத்தில் அரச மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியிலுள்ள ஓர் எல்லைப் பிரதேசமாகும். இங்கே புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிற்குச் செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்குமாக சோதனைச் சாவடி மைந்துள்ளது. இது புரிந்துணர்வு ஒப்பந்தப்படி இலங்கை இந்திய நேரப்படி காலை 7 மணியிலிருந்து மாலை 5:30 வரை திறந்திருக்கும்.
பொருளடக்கம் |
[தொகு] கல்வி
இங்கு ஓமந்தை மத்திய கல்லூரி அமைந்துள்ளது. இது போரினால் பாதிக்கப்டுப் பின்னர் நிக்கோட் மூலம் புனரமைக்கப்பட்டது.
[தொகு] ஓமந்தை சோதனைச் சாவடி
[தொகு] இராணுவப் பகுதி
சொந்த வாகனத்தில் செல்பவர்கள்
- தேசிய ஆளடையாள அட்டை
- வாகனத்தின் மூலப் பிரதியும் பிரதியும்
- தீர்வைப் பிரதி
- காப்புறுதிப் பிரதி
- சாரதி அனுமதிப் பத்திர மூலப் பிரதியும் பிரதியும்
பேருந்து அல்லது வேறு வாடகைக்கு அமர்த்தப்பட்ட வாகனங்களில் பிரயாணிப்பவர்கள்
- தேசிய ஆளடையாள அட்டை மாத்திரம் போதுமானது.
[தொகு] விடுதலைப்புலிகளின் பகுதி
சொந்த வாகனத்தில் செல்பவர்கள்
- விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி அல்லது இலங்கை அரசின் தேசிய ஆளடையாள அட்டை
- வாகனத் தீர்வைகட்டவில்லை எனின்
- வாகனத்தின் மூலப் பிரதி
- தீர்வை மூலப்பிரதி
- காப்புறுதிப் மூலப் பிரதி
- வாகனத்தீர்வை கட்டியிருப்பின் அந்த ஆவணம்.
பேருந்து அல்லது பிற வாகனங்களில் பிரயாணிப்பவர்கள்
- விடுதலைப் புலிகளின் நிதந்தரப் பயண அனுமதி அல்லது இலங்கை அரசின் தேசிய ஆளடையாள அட்டை
குறிப்பு: நிதந்தர அனுமதியின்றிப் விடுதலைப் புலிகளின் பகுதிகளிற்குச் செல்பவர்கள் தமது குறிப்பிட்ட இடத்தில் தமது வரவை மனிதவள அலுவலகத்தில் உறுதிப்படுத்திய பின்னரே விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருந்து வெளிச்செல்லமுடியும். இந்நடைமுறையானது தற்போதைய அசம்பாவிதங்களையடுத்தே நடைமுறையிலுள்ளது.