கங்காரு இறைச்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஆஸ்திரேலியாவில் வாழும் கங்காரு மிருகத்திடம் இருந்து பெறப்படும் இறைச்சி கங்காரு இறைச்சியாகும். இது பெரும்பாலும் காட்டில் வாழும் கங்காருவை வேட்டையாடி பெறப்பட்ட இறைச்சியேயாகும். இதை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் தம் உணவாக நெடுங்காலமாக உட்கொண்டு வருகின்றனர். இப்பொழுது யேர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் கங்காரு இறைச்சிக்கு வரவேற்பு உள்ளது.