கற்குவை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கற்குவை என்பது, மனிதரால் செயற்கையாக உருவாக்கப்படும் கற்குவியலைக் குறிக்கும். இவை மேட்டு நிலங்களிலும், பற்றைக் காட்டுப் பகுதிகளிலும், மலை உச்சிகளிலும், நீர்வழிகளுக்கு அருகிலும் காணப்படுகின்றன.
இவை பல்வேறு காரணங்களுக்காகக் கட்டப்படுகின்றன.
- இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அடையாளத்துக்காக அல்லது அவர்களுக்கான நினைவுச் சின்னமாக.
- மலை உச்சிகளைக் குறிப்பதற்காக.
- கற்பாங்கான தரிசு நிலங்களூடாகச் செல்லும் அல்லது பனியாறுகளுக்குக் குறுக்காகச் செல்லும் பாதைகளின் இரு மருங்கும் குறித்த இடைவெளிகளில், அப்பாதையைக் குறித்துக் காட்டுவதற்காக.
இவற்றுடன், கற்குவைகள் குறிப்பிட்ட இடங்களில் நடந்த பல்வேறு வகையான நிகழ்வுகளை நினைவு கூர்வதற்காகவும் அமைக்கப்படுகின்றன. இவை ஒரு போர் நிகழ்ந்த இடமாகவோ அல்லது ஒரு வண்டி கவிழ்ந்த இடமாகவோ இருக்கலாம். சில வெறுமனே ஒரு விவசாயி தனது வயலிலிருந்த கற்களை எடுத்துப் போட்ட இடமாகக்கூட இருக்கலாம்.
இவை தளர்வான, சிறிய குவைகளிலிருந்து, விரிவான, வியக்கத்தக்க பொறியியல் அமைப்பாகவும் இருக்கக்கூடும்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- கல்திட்டை
- கல்பதுக்கை
- குடைக்கல்
- நெடுங்கல்