கழாத்தலையார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கழாத்தலையார் அல்லது அழா அத்தலையார் எனக்குறிப்பிடப்படும் இவர் சங்க காலத் தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இவர் கழா அத்தலை என்னும் ஊரைச் சேர்ந்தவராதலால் இவர் இப் பெயரிட்டு அழைக்கப்பட்டார் என்பர். புறநானூற்றில் காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை.
இவர் கி.மு மூன்றாம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகின்றது.[1] சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனுக்கும், சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளிக்கும் இடையில் நடந்த போர் பற்றியும், பிற்காலத்தில் சேரமான் பெருஞ்சேரலாதனுக்கும், கரிகால் சோழனுக்கும் இடம்பெற்ற போர் குறித்தும் இவரது பாடல்கள் குறிப்புக்கள் தருகின்றன.
[தொகு] குறிப்புகள்
- ↑ செல்லம் வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ஏப்ரல் 1995, மறுபதிப்பு ஜூலை 2002