காந்தி நகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காந்தி நகர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் தலைநகராகும். மேலும் இது காந்தி நகர் மாவட்டத்தின் தலைநகரும் ஆகும். இது சண்டிகர் நகரைப் போன்றே திட்டமிடப்பட்டு கட்டப்பட்டது ஆகும்.
[தொகு] வரலாறு
1960-ல், பழைய பம்பாய் மாநிலமானது மகாராஷ்டிரம், குஜராத் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. அப்போது அகமதாபாத் நகரமே இதன் தலைநகரமாக இருந்தது. பின்னர் 1970-ல் இதன் தலைநகரமான்து காந்திநகருக்கு மாற்றப்பட்டது. இது குஜராத்தில் உள்ள போர்பந்தரில் பிறந்த மகாத்மா காந்தியடிகளின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்நகரம் சபர்மதி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.