குமாரி ஜயவர்த்தன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குமாரி ஜயவர்த்தன அவர்கள் தனது இரண்டாம் நிலைக் கல்வியை இலங்கையில் பெற்றுக் கொண்டதுடன், பின்னர் லண்டன் பொருளியல் பள்ளியிலும் (London School of Economics), பாரிஸிலுள்ள அரசியல் விஞ்ஞான நிறுவனத்திலும் (lnstitut de Science Politique) கல்வி கற்றார். அவர் 1985 ஜூலை வரையில் கொழும்பு பல்கலைக்கழகத்தில் அரசறிவியல் விஞ்ஞானத் துறையில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றினார். மேலும், 1981-1982 இல் ஹேக் நகரில் அமைந்துள்ள சமூக கற்கைகள் நிறுவனத்தின் (lnstitue of Social Studies) பெண்கள் ஆய்வுகள் நிகழ்ச்சித் திட்டத்தில் போதனாசிரியராக அவர் செயற்பட்டார். ஆங்கில மொழியில் இலங்கையில் தொழிற்சங்க இயக்கத்தின் எழுச்சி (Rise of The Labor Movement in Ceylon-Duke University Press) மற்றும் இலங்கையில் இனத்துவ மற்றும் வர்க்கப் போராட்டங்கள் (Ethnic and Class Stuggles in Sri Lanka-Colombo, 1985) போன்ற நூல்களினதும், சிங்கள மொழியில் பல நூல்களினதும் ஆசிரியராவார். அவர், இலங்கையின் பெண்கள் இயக்கத்திலும் சிவில் உரிமைகளுக்கான இயக்கத்திலும் முனைப்பான விதத்தில் செயற்பட்டு வருகின்றார்.