குமுதம் (இதழ்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குமுதம் தமிழ்நாட்டில் வெளியாகும் பிரபல வார இதழாகும். இது ஒரு வணிக இதழாகும். குமுதம் குழுமத்தினால் குமுதம் ரிப்போட்டர், குமுதம் தீராநதி, குமுதம் சினேகிதி, குமுதம் பக்தி, குமுதம் ஜோதிடம் போன்ற இதழ்கள் வெளியிடப்படுகின்றன. குமுதத்தின் போட்டியிதழாக ஆனந்த விகடன் கருதப்படுகிறது.
இந்திய வாசிப்போர் கருத்துக்கணிப்பின் படி கிழமை தோறும் குங்குமம் வார இதழுக்கு அடுத்தாக இரண்டாவது இடத்தில் விற்பனையாகும் இதழ்.