குறிஞ்சி நிலம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- இக்கட்டுரை குறிஞ்சி எனும் நிலத்திணையைப் பற்றியது. குறிஞ்சி எனும் பெயர் கொண்ட செடியைப் பற்றி அறிய, குறிஞ்சிச் செடியைப் பார்க்கவும்
குறிஞ்சி நிலம் என்பது பண்டைத் தமிழகத்தில் பகுத்து அறியப்பட்ட ஐந்து வகைத் தமிழர் நிலத்திணைகளில் ஒன்றாகும். மலையும் மலை சார்ந்த இடங்களும் குறிஞ்சி என அழைக்கப்படுகின்றன. குறிஞ்சி நிலத்திற்கு முருகன் குலதெய்வமாக பண்டைய மக்களால் வழிபடப்பட்டார். குறிஞ்சி நிலத்து ஊர்கள் சிறுகுடி, பாக்கம் என்று அழைக்கப்பட்டன.
[தொகு] குறிஞ்சி நிலத்தின் பொழுதுகள்
கூதிர், முன்பனி என்னும் பெரும் பொழுதுகளும் யாமம் என்னும் சிறுபொழுதும் குறிஞ்சி நிலத்துக்குரிய பொழுதுகளாகும்.
[தொகு] குறிஞ்சி நிலத்தின் கருப்பொருட்கள்
- தெய்வம்: முருகன்
- மக்கள்: பொருப்பன், வெற்பன், சிலம்பன், நாடன், கொடிச்சி
- விலங்குகள்: குரங்கு, கரடி
- மலர்கள்: குறிஞ்சி, காந்தள்
- மரங்கள்: வேங்கை, பலா
- பண்: குறிஞ்சி யாழ்
- தொழில்: கிழங்கு அகழ்தல், தேன் எடுத்தல்
தமிழர் நிலத்திணைகள் |
---|
குறிஞ்சி | முல்லை | மருதம் | நெய்தல் | பாலை |