குழந்தை இறப்பு வீதம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குழந்தை பிறந்து ஒரு ஆண்டுக்குள் இறந்தால் அது குழந்தை இறப்பு வீதம் புள்ளிவிபரத்தில் சேர்க்கப்படும். உயிருடன் பிறக்கும் ஒவ்வொரு 1000 குழந்தைகளில் எத்தனை குழந்தைகள் இறப்பை சந்திக்கின்றன என்பதை குழந்தை இறப்பு வீதம் சுட்டுகின்றது. Congenital disorder மற்றும் தொற்று நோய்களும் குழந்தைகள் இறப்புக்கு முக்கிய இரு காரணங்களாக வளர்ச்சி பெறும் நாடுகளில் இருந்து வந்தது. பல காலமாக dehydration from diarrhea குழந்தைகள் இறுப்புக்கான முக்கிய காரணமாக அனைத்துலக ரீதியில் இருந்தது. எனினும் விழுப்புணர்வு நடவடிக்கைகளின் காரணமாக இது இன்று இரண்டாம் முக்கிய காரணமாகவும், pneumonia முதல் காரணமாகவும் இருக்கின்றது.
குழந்தைகள் முதல் ஆண்டு உயிர் வாழ்வதற்கும் ஒரு நாட்டின் வாழ்க்கைத் அல்லது சுகாதாரத்துக்கும் இறுகிய இயைபு (correlation) உண்டு.
குழந்தை இறப்பு வீத கணிப்பீட்டு வரையறைகளில் வேறுபாடுகள் உண்டு. சில நாடுகள் (மேற்கு நாடுகள் உட்பட) ஒரு உயிருடன் பிறந்த குழந்தையின் இறப்பையே இந்த கணிப்பில் சேர்க்கின்றன.
பல சந்தர்ப்பங்களில் குழந்தைகள் 5 வயதுக்குள் வருவதற்கு முன் இறப்பது அதிகமாக இருக்கின்றது. ஆகையால், இந்த புள்ளி விபரத்தையும் கருத்தில் கொள்வது முக்கியம்.