கே. கணேஷ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கே. கணேஷ் (1920 - ஜூன் 5, 2004) தலாத்து ஓயாவைச் சேர்ந்த மலையகத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார்.
கணேஷ் தமிழகத்திலும் இலங்கையிலும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை ஆரம்பிப்பதில் பங்காற்றியவர். 1946 இல் 'பாரதி' என்ற முற்போக்குக் கலை இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தியவர். மொழிபெயர்ப்புத் துறையில் கணேஷின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. முல்க்ராஜ் ஆனந்த், கே. ஏ. அப்பாஸ், லூ சுன், ஹோ சி மின், சாந்தோர் பெட்டோஃபி முதலிய எழுத்தாளர்களின் படைப்புக்களை கணேஷ் தமிழுக்குத் தந்துள்ளார். கணேஷின் மொழிபெயர்ப்பு நூல்களின் எண்ணிக்கை 22 ஆகும்.
கணேஷிற்கு கனடாவின் 'இலக்கியத் தோட்டத்தினால்' 2003 ஆம் ஆண்டுக்கான இயல் விருது அளிக்கப்பட்டது.